சென்னையின் தலைமை அலுவலகமாக கொண்ட நமது “அதிரடி குரல்” மாத இதழின் அலுவலகம், தற்போது ஈரோட்டில் அதிரடி குரல் மாத இதழின் புதிய கிளை அலுவலகம் திறக்கப்பட்டது என்பதை பெறும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த ஈரோடில் உள்ள தலைமை நிருபர்கள்,நிருபர்கள்,அலுவலக ஊழியர்கள்,சமூக ஆர்வலர்கள்,மற்றும் பெரியோர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.தொடர்ந்துநிநிகழ்ச்சியின் முடிவில் புதிதாக இணைந்த நிருபர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது.
புகைப்பட கேலரி
DTP OPERATOR WANTED FOR ATHIRADIKURAL MAGAZINE……!
சென்னைவாசிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்……..!
“அதிரடிகுரல்” நிறுவனரின் ரம்ஜான் வாழ்த்து!
அஸ்ஸலாமு அலைக்கும்….வாகையுடன் இறைவனை வணங்கி, ஈகையுடன் ஜகாத் வழங்கி, மாண்பான நிலையை அடைந்து ,மகிழ்வுடன் ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள். அன்புடன் என்றும் வி.என்.ஜெயகாந்த், சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குனர்,”அதிரடிகுரல்” மாதஇதழ்,&அறக்கட்டளை,”அதிரடிகுரல்” ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம்,சென்னை.
எங்களது ஆசிரியர்&நிர்வாக இயக்குனருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது…!
செய்தியாளர்:அ.நூருல்அமீன்,இராமநாதபுரம் மாவட்டம். “அதிரடிகுரல்” இதழ் மற்றும் “அதிரடிகுரல்” அறக்கட்டளை மூலம் சமூக சேவைக்காக தன்னையே அர்பணித்து சேவை மனப்பான்மையுடன் பொதுமக்களுக்கு பல்வேறு வகையில் மருத்துவம்,கல்வி,உணவு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை எதையும் எதிர்பார்க்காது தர்மம் ஒன்றையே தனது உயிர் மூச்சாக கருதி பொதுத் தொண்டாற்றிவரும் எங்களது ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் வி.என.ஜெயகாந்த் அவர்களுக்கு சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்து உள்ளது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கும், அனைத்து மாவட்டநிருபர்கள்,புகைப்படக்கலைஞர்கள்,மற்றும் ஊழியர்கள்.
மனசொலி ஆசிரியர் குரு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்!
செய்தியாளர்:அ.நூருல்அமீன். தமிழ்நாடு சிறுபத்திரிக்கையாளர்கள் நலச்சங்க மாநில தலைவரும் மனசொலி மாலை நாளிதழின் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளருமான திரு.கா.குரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு “அதிரடிகுரல்” இதழ் மற்றும் “அதிரடிகுரல்” அறக்கட்டளை ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் வி.என்.ஜெயகாந்த் அவர்கள் பூங்கொத்து வழங்கி பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். அருகில் “பகுஜன்குரல்” ஆசிரியர் டாக்டர் ஜெகதீசன் அவர்கள் மற்றும் தொட்டில்செய்தி ஆசிரியர் முருகேசன் ஆகியோர் உள்ளனர்.
“அதிரடிகுரல்” இதழ் மற்றும் அறக்கட்டளை சார்பாக 24வது அன்னதான நிகழ்ச்சி.
”அதிரடிகுரல்” இதழ் மற்றும் அறக்கட்டளை சார்பாக ஏழை எளிய மக்களுக்கு 24வது வார அன்னதான நிகழ்ச்சி பத்திரிக்கையாளர்கள் நண்பர்களுடன் வழங்கப்பட்டது. சிறப்பான முறையில் ஏழை,எளிய மக்களுக்கு வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்னதானம் வழங்கி அத்துடன் தினமும் வெயிலின் தாக்கத்தினால் வாடும் பொதுமக்களுக்கு பழரசத்துடன் நீர்,மோர் வழங்கிவரும் நமது ”அதிரடிகுரல்” இதழ் ஆசிரியர் மற்றும் அதிரடிகுரல் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் டாக்டர் திரு.வி.என்.ஜெயகாந்த் அவர்களுக்கு பகுஜன்குரல் நிர்வாகி திரு.கணேஷ்பாபு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.