சென்னை

காவல் துறை வாத்திய இசைக்குழு காவலரை பிற பிரிவுகளுக்கு மாற்றக் கூடாது- ஹைகோர்ட் உத்தரவு.

சென்னை: காவல் துறை வாத்திய இசைக் குழு காவலரை, பிற பிரிவு இரண்டாம் நிலை காவலராக பணிமாற்றம் செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழ்நாடு காவல் துறையில் வாத்திய இசைக் குழு காவலராக கோவை ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பர்கத். இசைக் குழு காவலர்களுக்கும், பிற பிரிவு இரண்டாம் நிலை காவலர்களுக்கும் ஒரே ஊதிய விகிதமே பின்பற்றப்படுவதாலும், ஒரே அந்தஸ்து உள்ளதாலும், தன்னை இரண்டாம் நிலை காவலர் பணிக்கு மாற்ற வேண்டும் என, […]

சென்னை

ஓஎம்ஆர் சாலை படூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராமசபை கூட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்!

ஓஎம்ஆர் சாலை படூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராமசபை கூட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் படூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பகுதியில் சிறியதாக உள்ள குறைகளை கரூர் ஊராட்சி செயலர் வாசுதேவன் அவர்களிடம் கூறினார்கள் உடனடியாக இரண்டு நாட்களில் அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றுவதாக ஊராட்சி செயலர் கூறியுள்ளார். இதில் முக்கியமாக வரும்காலம் மழைக்காலமாக இருப்பதால் பொதுமக்கள் அவசியமாக […]

சென்னை

குப்பையில் வீசப்பட்ட 3 டன் நொறுக்குதீனி-பெற்றோர்களே உஷார்!

சென்னை அம்பத்தூர் அருகே சாலையோர குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட 3 டன் எடையுள்ள காலாவதியான நொறுக்குத்தீனி பாக்கெட்டுக்களை காவல்துறையினர் தீவைத்து அழித்தனர். குழந்தைகளின் உடலுக்குக் கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனியின் தீமைகள் குறித்து எச்சரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. அம்பத்தூர் அருகே நொளம்பூரில் சாலையோர குப்பைக் கிடங்கில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் பட்டப்பகலில் 3 டன் எடை கொண்ட நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன. தற்போது […]

சென்னை

2 வாரம் அவர் பார்த்துக்கட்டுமே.. ஐடியா சொன்ன அமித் ஷா.. ஓபிஎஸ் ஹாப்பி.. அதிமுகவில் என்ன நடக்குமோ?

சென்னை: முதல்வர் பழனிச்சாமி இந்த மாதம் இறுதியில் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். அவரின் இந்த பயணத்தின் போது தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக முதல்நாள் இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், உள்துறை […]

சென்னை

கொள்ளையர்களை விரட்டிய நெல்லை வீர தம்பதிக்கு.. சுதந்திர தினத்தில் முதல்வர் அளிக்கும் கௌரவம்!

சென்னை: கொள்ளையர்களை விரட்டிய நெல்லை வீர தம்பதிகளுக்கு நாளை சுதந்திர தின கொண்டாட்டத்தில், தமிழக அரசு நாளை விருது வழங்கி கௌரவிக்க உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவரது தோட்டத்து வீட்டிற்கு கடந்த இரண்டு நாளுக்கு முன்பு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நுழைந்தனர். அவர்கள் சண்முகவேலின் கழுத்தில் தூண்டை இறுக்கி போட்டு கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடினார். அபபோது அதனைபார்த்த அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி […]

சென்னை

கருணாநிதி, திமுகவை புறக்கணித்து திருக்குறள் மாநாடா? கொந்தளிக்கும் திராவிடர் இயக்க ஆதரவாளர்கள்!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் திமுக இல்லாமல் பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் திருக்குறள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது திராவிடர் இயக்க ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சித்தாந்த ரீதியாக திராவிடமே வேர்பிடித்து நிற்கிறது. இதை தமிழ்த் தேசியம் பெயரிலான குழுக்கள் கடுமையாக விமர்சித்து வந்தன. நாம் தமிழர் கட்சி விஸ்வரூபம் எடுத்த நிலையில் திராவிட சித்தாந்தம் குறித்த விவாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெரியாரை ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியவாதிகள் […]

சென்னை

சென்னை இஸ்லாமியர்கள் புறக்கணித்திருந்தால் பெரும் தோல்வியை சந்தித்திருப்பார் ஏசிஎஸ்.. தமிழிசை அதிரடி!

சென்னை: வேலூர் தேர்தலில் ஏசி சண்முகம் தோற்க பாஜக காரணம் இல்லை என்றும், ஏசி சண்முகம் இப்படி ஏன் சொல்கிறார் என தெரியவில்லை என்றும் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். வேலூர் தேர்தல் பிரச்சார சமயத்தில், பாஜக தலைமையின் ஒவ்வொரு செயல்பாடும் அதிமுக தலைமை வயிற்றில் புளியை கரைப்பதாகவே இருந்தது. அதனால்தான், முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றிய நிலையில், பாஜகவை பிரச்சாரத்திற்கு வரவிடாமல் தடைபோட்டது அதிமுக என்று சொல்லப்பட்டது. செம மூவ்.. அதிரடி ஆக்ஷன்.. திமுகவுக்கு செக் வைக்க சசிகலா […]

சென்னை

எடப்பாடியின் பார்வையில் சதன் பிராபாகரன்! விரைவில் அமைச்சராகிறார்..

தமிழகத்தில் தகவல், தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் திடீரென அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் நீக்கத்தால் கட்சியில் பெரிய அளவில் அதிருப்தியோ, அதிர்ச்சியோ ஏற்படவில்லை. தற்போது மணிகண்டன் பார்த்து வந்த துறைகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கவனித்து வருகிறார். ஏற்கனவே உதயகுமார் வருவாய், பேரிடர் உள்ளிட்ட துறைகளை கவனித்து வரும் நிலையில் இந்த புதிய பொறுப்புகள் அவருக்கு கடும் சுமையை ஏற்படுத்தும் என எடப்பாடி கருதுகிறார். இந்நிலையில் மணிகண்டனுக்குப் பதில் அவரது இலாகாக்களை பார்த்துக் கொள்ள […]

சென்னை

ராகுலே கை கழுவிட்டார்.. ஸ்டாலின் மட்டும் சும்மாவா இருப்பார்.. திகிலடிக்கும் அறிவாலய பிளான்கள்!

சென்னை: ராகுல் காந்தியே காங்கிரஸ் கட்சியை கை கழுவி விட்ட நிலையில், அக்கட்சியை தூக்கிப் பிடிக்கும் அவசியம் திமுகவுக்கு இல்லை என்று அக்கட்சியினர் கூற ஆரம்பித்துள்ளனர். இதனால் திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற்றப்படுமா என்ற பரபரப்பு எழுந்துள்ளது. ஸ்டாலினை நாமெல்லாம் தி.மு.க.வின் தலைவர், தமிழகத்தின் எதிர்கட்சி தலைவர்! என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்க, அவரோ தன்னை அகில இந்திய அளவில் ப்ரமோட் செய்து கொண்டிருக்கிறார். பாசிடீவ் சேனலில் போனால் அவ்வளவு எளிதாக அகில இந்திய அரசியலின் கவனத்தை […]

சென்னை

இனிமேலும் நடுநிலையா? வாய்ப்பே இல்லை.. மொத்தமாக பாஜக பக்கம் சாய்ந்த ரஜினியின் ஆன்மீக அரசியல்!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முன்பே மொத்தமாக பாஜகவிற்கு ஆதரவளிக்க தொடங்கிவிட்டார். இன்று கலைவாணர் அரங்கத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவர் பாராட்டி பேசியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து இதோடு இரண்டு வருடம் ஆக போகிறது. ஆனால் இன்னும் அவர் நடிகர் ரஜினிகாந்தாக மட்டும்தான் இருக்கிறார். அரசியல்வாதி ரஜினியாக மாற அவர் ஏனோ தொடர்ந்து யோசித்து வருகிறார். சிஸ்டம் சரியில்லை என்று கூறிவிட்டு கட்சி அறிவிப்பை […]