தமிழ்நாடு முக்கிய செய்திகள்

லடாக் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடல் முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம்.

இராமநாதபுரம்,ஜீன்.18:- இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை,தாலுகாவில் உள்ள கடுக்காலூர் கிராமத்தில் ராணுவ வீரர் பழனியின் தாய் தந்தையர் இல்லத்தில் அரசு மரியாதைகளுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் உடல் வந்து சேர்ந்தது.இதனையடுத்து பொதுமக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்டது.கிராம மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.அதன்பின் இன்று அதிகாலை 7 மணி அளவில் அவருக்கான இறுதிச்சடங்குகள் ஆரம்பமானது.முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை செய்து அவரது உடலை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். அதன்பின் மாவட்ட […]

முக்கிய செய்திகள்

அழைப்பு மற்றும் உபசரிப்பில் பாரபட்சம். ராமநாதபுரம் எம்.பியின் கவனத்திற்கு!

நமதுசெய்தியாளர்:அ.நூருல்அமீன். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ஜனாப்.கா.நவாஸ்கனி போட்டியிட்டு அதிக அளவில் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது அனைவரும் அறிந்ததே.மேலும் 50ஆண்டுகளுக்கு பின் ராமநாதபுரத்தை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கோட்டையாகவும் தக்க வைத்த பெருமையும் ஜனாப்.கா.நவாஸ்கனிக்கே உரித்தானதொன்றாகும். இந்நிலையில் எம்.பியாக பதிவியேற்ற பின்னர் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பழைய செக்போஸ்ட் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அதற்கான முறையான அழைப்பு முதல் […]

முக்கிய செய்திகள்

பத்திரிக்கையாளர் யூனியன்ஆலோசனைக் கூட்டம்!

ராமநாதபுரம் செய்தியாளர் அ.நூருல்அமீன். தமிழ்நாடு பிரஸ்&மீடியா ரிப்போர்ட்டர்ஸ் யூனியன் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள்& உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் 25.3.2019 காலை 11 மணி அளவில் இராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நாடார் உறவின்முறை அரங்கத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் மு.சிவதமிழவன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டகாப்பாளர் & ஆலோசகர்அப்துல் ரசாக்(புலனாய்வுஎக்ஸ்பிரஸ்), மாவட்ட அமைப்பாளர் M.M. நசீர்(நாளையதீர்ப்பு),மாவட்டதுணைஅமைப்பாளர் அ.நூருல்அமீன்(அதிரடிகுரல்), மாவட்ட செயலாளர் NK.ராஜன்(கோவைதராசு), மாவட்ட செய்தி தொடர்பாளர் N. கார்த்திக்கேயன்(சட்டம்ஒழுங்கு), மாவட்ட துணைச் செயலாளர் MM. முனீஸ்(சட்டம்ஒழுங்கு),மாவட்டசெயற்குழு உறுப்பினர் என்.இம்கான்ஹீசைன்(திருவாடானை […]

முக்கிய செய்திகள்

ராமநாதபுரத்தில் ஏற்றமடையும் ஏணி! கா.நவாஸ்கனி எம்.பியாகிறார்.

நமது நிருபர் அ.நூருல்அமீன். ராமநாதபுரம் பாராளுமன்றத்தொகுதியில் நமது ”அதிரடிகுரல்” இதழின் தேர்தல்சர்வேயில் தி.மு.க கூட்டணி கட்சியான இந்தியயூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் வேட்பாளர் ஜனாப் கா.நவாஸ்கனி அவர்களுக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏணி சின்னமானது ராமநாதபுரத்தில் தொடர்ந்து ஏற்றமடைந்து வருவதால் கா.நவாஸ்கனி எம்.பியாக பதவியேற்பது உறுதி. இது குறித்த முழு சர்வே வரும் ஏப்ரல் இதழில் வெளியாகும். தொடர்ந்து சமூகவலைதளங்களிலும்,பொதுமக்களிடையேயும் தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது. களத்தில் கூட்டணிகட்சியான ம.ம.க நிர்வாகிகளும் களப்பணியாற்றி வருவதால் வெற்றிக்கனி எட்டிப்பறிக்கும் […]

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

அமைச்சர் டு ஆட்சியர் பயணிக்கும் சாலை. எப்போது சீர்செய்யும் வேலை?

செய்தியாளர்:அ.நூருல்அமீன். இராமநாதபுரம் அரசுமருத்துவமனையிலிருந்து பழையபஸ்ஸ்டாண்ட் வரையிலும் மெயின்ரோடு கடந்த ஐந்து மாதகாலமாக மிகுந்த மோசமான நிலையில் மேடுபள்ளம் மற்றும் கடுமையான தூசி கிளம்பி காற்றுமாசு ஏற்படுகிறது இந்த ரோடு மதுரை ராமேஸ்வரம்மெயின்ரோடு ஆகும். இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கனக்கானவர்கள் கடந்து செல்கிறார்கள்.இதில் அரசியல் வாதிகள்,மாவட்ட அமைச்சர் அரசு ஊழியர்கள் குறிப்பாக நெடுஞ்சாலைதுறையினர் ஏன் மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு இந்த சாலைவழியாகவே தினமும் பயணிக்கிறார்கள் இந்தசாலை வழியே செல்பவர்களைவிட நிரந்தரமாக கடை வைத்திருப்பவர்கள் வேறுஎங்கும் செல்ல இயலாமல் மிகுந்த […]

சென்னை தமிழ்நாடு புகைப்பட கேலரி முக்கிய செய்திகள்

அதிரடி குரல் மாத இதழ் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு இலவச உணவு

நமது “அதிரடி குரல்” மாத இதழ் மற்றும் “அதிரடி குரல் அறக்கட்டளை” சார்பாக ஒவ்வொரு வாரமும் ஏழை,எளிய மக்களுக்கு வெள்ளிக்கிழமை தோறும் மதியம் 1:00 மணி அளவில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து இன்று பத்திரிக்கையாளர்கள் நண்பர்களுடன் உணவு வழங்கப்பட்டது..

இந்தியா முக்கிய செய்திகள்

கலக்கிய கலாம் சாட்

உலகிலேயே எடை குறைந்த சாட்டிலைட் சென்னை: தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட கலாம் சாட் இஸ்ரோ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்த சாட்டிலைட் உலகிலேயே மிகவும் எடை குறைந்த சாட்டிலைட் ஆகும். நேற்று இரவு 11.30 மணிக்கு 2 செயற்கைகோளுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட். இஸ்ரோ மைக்ரோசாட்-ஆர், கலாம் சாட் செயற்கைகோளை ஏவியது. இந்த இரண்டு சாட்டிலைட்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதில் கலாம் சாட் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்து இருக்கிறது. பெரிய வைரலாகி […]

இந்தியா முக்கிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடியா? சான்சே இல்லை.. மறுக்கும் தேர்தல் ஆணையம்

டெல்லி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடுகளும் செய்ய முடியாது என்று திட்ட வட்டமாக மறுப்பு தெரிவித்துள்ள தலைமை தேர்தல் ஆணையம், லண்டனில் நிகழ்ச்சி நடத்திய சுஜா மீது டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்தே பாஜக அரசு தேர்தலில் வெற்றி பெற்று வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வந்தன. அதனால், வாக்குச் சீட்டு முறையை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை எதிர்க்கட்சிகள் எழுப்பின. அண்மையில் முடிந்த […]

தமிழ்நாடு முக்கிய செய்திகள்

கொடநாடு கொள்ளை சம்பவத்துடன் எனக்கு தொடர்பில்லை

ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையின் போது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என கனகராஜ் கொலையும் சந்தேகத்துக்கிடமானது என்றும் திடுக் தகவலை அடங்கிய வீடியோ ஆவணத்தை தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார். இதுகுறித்து மேத்யூஸ் கூறுகையில், வெறும் கைக்கடிக்காரங்கள்தான் கொடநாடு எஸ்டேட்டில் திருடப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. வெறும் கடிகாரங்களை திருடவா முன்னாள் முதல்வர் இல்லத்தில் கொலை […]