முக்கிய செய்திகள்

அழைப்பு மற்றும் உபசரிப்பில் பாரபட்சம். ராமநாதபுரம் எம்.பியின் கவனத்திற்கு!

நமதுசெய்தியாளர்:அ.நூருல்அமீன்.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளராக ஜனாப்.கா.நவாஸ்கனி போட்டியிட்டு அதிக அளவில் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது அனைவரும் அறிந்ததே.மேலும் 50ஆண்டுகளுக்கு பின் ராமநாதபுரத்தை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கோட்டையாகவும் தக்க வைத்த பெருமையும் ஜனாப்.கா.நவாஸ்கனிக்கே உரித்தானதொன்றாகும்.

இந்நிலையில் எம்.பியாக பதிவியேற்ற பின்னர் முதன்முறையாக ராமநாதபுரத்தில் பழைய செக்போஸ்ட் அருகே உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.அதற்கான முறையான அழைப்பு முதல் உபசரிப்பு வரை சில முன்னனி ஊடகங்களில்(ஊதியத்துடன்)பணிபுரியும் செய்தியாளர்களுக்கு மட்டுமே சாதகமாக இருந்தது என்பதே நிதர்சனமான உண்மை.ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் தின,வார,மாத,பருவஇதழ்கள் என முழுநேரமாக பணியாற்றக் கூடியவர்கள் சுமார் 50க்கும் மேறப்பட்டோர் உள்ளனர். இவர்களில் காட்சி ஊடகத்தினரும் அடங்குவர். மேலே குறிப்பிட்டுள்ள 50 செய்தியாளர்களில் 30 நபர்களுக்கு மட்டுமே முறையான அழைப்பு மற்றும் உபசரிப்பு வழங்கப்பட்டது என்பதை எம்.பியின் கவனத்திற்க்கு இப்பதிவின் மூலம் தெரியப்படுத்துகிறோம்.

அழையா விருந்தாளியாக எஞ்சிய 20 பத்திரிக்கையாளர்களும் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர். பொதுவாகவே ஒரு செய்தியாளருக்கு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு தகவல் தெரிவிக்கப்படும் போது தன்னோடு சார்ந்த மற்றுமொரு பத்திரிக்கையாளருக்கு தகவல் தெரிவிப்பது வழக்கம். அதனடிப்படையில் இந்த செய்தியாளர்கள் சந்திப்பு காட்டுத்தீ போல பரவி எஞ்சிய 20செய்தியாளர்களும் தனியார் விடுதியை வந்தடைந்தனர் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.

செய்தியாளர்கள் சந்திப்பு நிறைவு பெற்றதன் பின்னர் கலந்து கொண்ட அனைத்து செய்தியாளர்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அதில் 20 செய்தியாளர்களுக்கு மட்டும் கவருடன் 2000ரூபாய் வழங்கப்பட்டது. மீதமுள்ள 30க்கும் மேற்பட்ட செய்தியாளர்களுக்கு ஏதோ தினக்கூலி வழங்குவது போல 500ரூபாய் மட்டும் அவரவர் கைகளில் வழங்கப்பட்டது குறித்து மூத்த பத்திரிக்கையாளர்கள் பலரும் அதிருப்தியுடன் காணப்பட்டனர். இது எம்.பி ஜனாப். நவாஸ்கனிக்கு தெரிவதற்கு வாய்ப்பில்லை என்பதற்காகவே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கொடுப்பதென்றால் அனைவருக்கும் சமமாக அன்பளிப்பு கொடுக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் குறைந்த அன்பளிப்பு கொடுக்கப்படும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒரு கவரிலாவது போட்டு வழங்கியிருக்கலாம். என்பதே குறைந்த அளவு அன்பளிப்பு வாங்கிய பத்திரிக்கையாளர்களின் குமுறலாக உள்ளது.

மேலும் ராமநாதபுரம் நகரைப் பொறுத்தமட்டில் செய்தியாளர்களிடையே பலத்த பாகுபாடு நிலவி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தான் தனக்கு தெரிந்த தகவலை தன்னுடன் பணியாற்றும் முன்னனி செய்தியாளர்களுக்கு மட்டும் தெரிவிக்கின்றனர். சிற்றிதழ்களின் நிருபர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். அதனால் இனி வரும் காலங்களில் எம்.பி அவர்கள் நடத்திடும் செய்தியாளர்கள் சந்திப்பை நகரின் ஓட்டுமொத்த பத்திரிக்கையாளர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்க தனது பி.ஆர்.ஓக்கு உத்தரவு பிறப்பித்தாலே போதுமானது. இது போன்ற குறைகள் எளிதில் களையப்பட்டு விடும்.

பத்திரிக்கை பலவாறாக இருக்கலாம். ஆனால் அவை அனைத்தும் அங்கீகரிக்கப்படுவது ஆர்.என்.ஐ எனும் மூன்றெழுத்து மந்திரத்தால்தான். என்பது எம்.பி அவர்கள் நியமித்துள்ள பி.ஆர்.ஓக்கு தெரியாதோ? என்னவோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *