அறிவியல்

மாசுபாட்டை குறைக்க, மின்சாரம் தயாரிக்க ஒரே இயந்திரம்

ஐஐடி-யில் 2017ம் ஆண்டு பயோ டெக்னாலஜி படித்து பட்டம் பெற்ற ஃபிடல் குமார் என்ற மாணவர் மின்சாரத்தை கண்டுபிடிக்க புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

காற்றாலை, சூரிய மின்சக்தி, தண்ணீர் மின் சக்தி போன்ற பல இயற்கை வழிகளில் மின் சக்தியை தயாரிக்க விஞ்ஞானிகள் முயல்கின்றனர். நிலக்கரி, அணு மின் நிலையங்களால் கிடைகுக்கும் மின்சாரம் ஒருநாள் அழிந்துபோவது நிச்சயம். மாணவர்கள் பலர் இயற்கை மின் சக்தியை தயாரித்து அறிவியல் கண்காட்சிகளில் காட்சி படுத்துகின்றனர்.

இந்நிலையில் நுண் உயிரிகளை உடைப்பதால் மின்சாரம் உருவாக்கும் முறையை கண்டறிந்துள்ளார். சென்னை ஐஐடி பயோடெக்னாலஜி மாணவர் ஃபிடல் குமார்.

சாயத் தொழிற்சாலை, பிரிண்டிங் தொழிற்சாலை, தோல் தொழிற்சாலை கழிவுகள் ஆற்றில் கலந்து தண்ணீர் மாசு ஏற்படுத்துகின்றன. இதனைத் தடுக்கவும் மின்சாரம் தயாரிக்கவும் பயன்படுகிறது இந்த இயந்திரம். நீரில் கலக்கும் ரசாயனத்தை நுன் உயிரிகள் கொண்டு உடைத்து அதன்மூலமாக மின்சாரம் தயாரிக்கலாம். இதனால் நீரில் உள்ள ரசாயனங்கள் கொல்லப்பட்டு ஆற்று நீரும் சுத்தமாகும் என்கிறார் குமார். இந்த இயந்திரத்துக்கு பராமரிப்பு செலவு மிகமிகக் குறைவு. இதனை நாடு முழுவதும் கொண்டுவந்தால் குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க முடியும் என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *