தூத்துக்குடி,ஜீன்.20:-

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் முத்துவேல். இவர் ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு பாலிமர் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடம் காவல் ஆய்வாளர் கஜேந்திரன் மீது தூத்துக்குடி எஸ்பி ஆபிஸில் கந்துவட்டி புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் பாலிமர் செய்தியாளர் முத்துவேல் அந்த செய்தியினை பிரசுரித்தார். இதனால் ஆத்திரமடைந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் இன்று அவரது கையாலான சண்முகநாதன் என்ற நபரை வைத்து இன்று இரவு 9 மணி அளவில் முத்துவேல் அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு போலீசாருக்கும் அப்பகுதி செய்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
