அறிவியல் தமிழ்நாடு

கேப்பையின் மகத்துவம் பாருங்கள்!

கேப்பையின் (கேழ்வரகு, ராகி) மகத்துவம்:

எளியவர் மற்றும் குழந்தை நலனில் அக்கறை உள்ளோருக்கான பதிவு இது, விருப்பம் இல்லாதோர் கடந்து செல்லலாம்.

குழந்தைகள் திட உணவு எடுத்துக்கொள்ளும் நேரத்தில் நமது அடுத்த கட்ட நகர்வு செர்லாக் மற்றும் காம்ப்ளான் போன்றவற்றை நோக்கித்தான் இருக்கும்.

ஆனால் அதை விட ஆயிரம் மடங்குகள் அதிகம் நன்மை பயக்கும் கேப்பை மீது நம் கண்கள் செல்வது இல்லை.

இனிமேலாவது குழந்தைகளுக்கு கேப்பையில் பால் எடுத்து அதனுடன் கருப்பட்டி (பனை வெல்லம்) அல்லது பனங்கற்கண்டு சேர்த்து காய்த்து கொடுங்கள் குழந்தை நல்ல ஆரோக்கியத்துடனும் நல்ல உடல் வலிமையுடன் வளரும்.

● தானியமாக முழு கேப்பையை வாங்கிக் கொள்ளுங்கள்.

● பின்னர் நன்கு சுத்தம் செய்து ஒரு முறைக்கு இரு முறை கழுவிக்கொள்ளுங்கள்.

● காற்று புகாதவாறு ஒரு பாத்திரத்தில் மூடிவைத்துக்கொள்ளுங்கள்.

● பின்னர் அடுத்த நாள் ஊற வைத்த தண்ணீர் உடன் சேர்த்து நன்கு மை போல் அரைத்து கொள்ளுங்கள்.

● நல்ல ஒரு சுத்தமான துணியில் பாலை தனியாகவும் சக்கையை தனியாகவும் பிரித்துக் கொள்ளுங்கள்.

● பின்னர் கேப்பைப்பாலையும் அதனுடன் கருப்பட்டியையும் சேர்த்து நன்கு காய்த்த்துக் கொள்ளுங்கள்.

● பின்னர் குழந்தைக்கு கொடுக்கலாம் மீதம் உள்ளதை ஒரு 3 மணி நேரம் கழித்தும் கொடுக்கலாம்.

● முதுகுத் தடம் நலிவு அடைந்த குழந்தைகளுக்கு இது நல்ல பலன் தரும்.

முன்பு உள்ள காலங்களில் கடற்புரங்களில் கேழ்வரகுக் கூழுடன் கருவாட்டுக் கறியும் சேர்த்து சாப்பிடுவது வழக்கம்.

ஒரு முக்கிய குறிப்பு:

  • சில குழந்தைகளுக்கு இதுவயிற்றுக்கு ஒத்துப்போகாது அவ்வாறு ஒத்துப்போகது குழந்தைகளுக்கு கேப்பை கொடுப்பதை தவிர்க்கலாம்.

அ.நூருல்அமீன்,இராமநாதபுரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *