தமிழ்நாடு

நெல்லை முன்னால் மேயர் பெண் படு கொலை : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.

நெல்லை மாவட்டம். ரெட்டியார் பட்டியை சேர்ந்த உமா மகேஸ்வரி 1996 ஆண்டு தி மு க சார்பில் நெல்லை மாநகராட்சியில் முதல் பெண் மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது .

இந்த நிலையில் இவர் ரெட்டியார் பட்டியில் வசித்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணியளவில் வீடு புகுந்து உமா மகேஸ்வரி அவரது கணவர். பணிப்பெண் உள்ளிட்ட மூன்று பேரையும் கொடூரமாக வெட்டி படு கொலை செய்த சமூக விரோதிகளை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.

அமைதி பூங்காவாக உள்ள தமிழகத்தில் தொடர்ச்சியாக படு கொலைகள் நடந்த வண்ணமாக உள்ளது இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.

உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேரையும் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.

எனவே : இந்த படு கொலை செய்த சமூக விரோதிகளை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த கொலைக்கான பின்னனியை கண்டறிய உரிய விசாரணையை நடத்த வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழக அரசையும் காவல் துறையும் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *