சென்னை

2 வாரம் அவர் பார்த்துக்கட்டுமே.. ஐடியா சொன்ன அமித் ஷா.. ஓபிஎஸ் ஹாப்பி.. அதிமுகவில் என்ன நடக்குமோ?

சென்னை:

முதல்வர் பழனிச்சாமி இந்த மாதம் இறுதியில் அமெரிக்க சுற்றுப்பயணம் செல்ல உள்ளார். அவரின் இந்த பயணத்தின் போது தமிழக அரசியலில் நிறைய மாற்றங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னை கலைவாணர் அரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக முதல்நாள் இரவு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ஆலோசனை நடத்தினார்கள். இதில் பல முக்கிய விஷயங்கள் பேசப்பட்டது.
ஜம்மு காஷ்மீரில் எத்தனை தொகுதிகள் இருக்கும்? எப்போது தேர்தல்? ஆணையம் ஆலோசனை!

அதிமுக சிக்கல்
தற்போது அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை நிலவி வருகிறது. இந்த பிரச்சனை குறித்தும் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசல் குறித்தும் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமித் ஷா கேள்வி எழுப்பி இருக்கிறார். கட்சியில் என்னதான் நடக்கிறது, ஏன் தலைவர்கள் இடையே மனக்கசப்பு நிகழ்கிறது என்று கேட்டுள்ளார்.

முக்கியம்
இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி இந்த மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் செல்கிறார். 14 நாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார். இதை அவர் அமித் ஷாவிடம் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து நீங்கள் தமிழ்நாட்டில் இருக்க மாட்டீர்களா?, அதற்குள் ஆட்சியில் எதுவும் பிரச்சனை வர கூடாது. அதனால் நிர்வாக பொறுப்பை மட்டும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள் என்றுள்ளார்.

ஆட்சி பொறுப்பு
அவரிடம் பொறுப்புகளை மட்டும் கொடுத்துவிட்டு செல்லுங்கள். அதிகாரிகளை அவரால் மட்டும்தான் கட்டுப்படுத்த முடியும் என்று அமித் ஷா ஆலோசனை வழங்கி இருக்கிறார். ஆனால் இதை முதல்வர் இன்னும் ஏற்றுக்கொண்டது போல தெரியவில்லை. ஏற்கனவே அதிகாரிகள் தன்னுடைய பேச்சை முழுதாக கேட்பதால், இரண்டு வாரத்தில் எந்த சிக்கலும் வராது என்று நம்புகிறார் முதல்வர்.

சிக்கல் இல்லை
ஆம் ஜெயலலிதாவிற்கு இணையாக தற்போது எடப்பாடி பழனிச்சாமி எல்லா அதிகாரிகளையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருக்கிறார். முக்கியமாக தலைமைச் செயலக அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லோரும் தன்னுடைய சொல்லுக்கு கட்டுப்படுவது போல எடப்பாடி பழனிச்சாமி கட்டுப்பாட்டுடன் செயல்படுகிறார்.

ஆனால் என்ன
இந்த நிலையில்தான் இரண்டு வார நிர்வாக பொறுப்பு மட்டும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது இன்னும் உறுதியாகவில்லை. ஆனாலும் கூட ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு இது பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. இதன் மூலம் ஆட்சியிலும், கட்சியிலும் முக்கியமான நபர்களை தன்னுடைய வழிக்கு கொண்டு வரலாம் என்று ஓ.பன்னீர்செல்வம் நினைப்பதாக கூறுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *