தமிழ்நாடு முக்கிய செய்திகள்

அமைச்சர் டு ஆட்சியர் பயணிக்கும் சாலை. எப்போது சீர்செய்யும் வேலை?

செய்தியாளர்:அ.நூருல்அமீன்.

இராமநாதபுரம் அரசுமருத்துவமனையிலிருந்து பழையபஸ்ஸ்டாண்ட் வரையிலும் மெயின்ரோடு கடந்த ஐந்து மாதகாலமாக மிகுந்த மோசமான நிலையில் மேடுபள்ளம் மற்றும் கடுமையான தூசி கிளம்பி காற்றுமாசு ஏற்படுகிறது இந்த ரோடு மதுரை ராமேஸ்வரம்மெயின்ரோடு ஆகும். இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கனக்கானவர்கள் கடந்து செல்கிறார்கள்.இதில் அரசியல் வாதிகள்,மாவட்ட அமைச்சர் அரசு ஊழியர்கள் குறிப்பாக நெடுஞ்சாலைதுறையினர் ஏன் மாவட்ட ஆட்சியர் முதற்கொண்டு இந்த சாலைவழியாகவே தினமும் பயணிக்கிறார்கள் இந்தசாலை வழியே செல்பவர்களைவிட நிரந்தரமாக கடை வைத்திருப்பவர்கள் வேறுஎங்கும் செல்ல இயலாமல் மிகுந்த மனஉலைச்சல் மற்றும் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த சாலையின்மீது தார் பரப்பிட ஆவணசெய்யவேண்டும் . மற்றவர்கள் சொல்லித்தான் வேலை செய்யவேண்டும் என்பதில்லை.தினமும் லட்சக்கணக்கான பிரயாணிகள் பயணிக்கும் இந்த சாலையானது மோசமான நிலையில் பயணிப்பதற்கு லாயக்கற்று உள்ளது. இதனை மாவட்டநிர்வாகம் கண்டுகொள்ளாமலிருப்பது பொதுமக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய மாவட்டஆட்சியர் திரு.கொ.வீரராகவராவ் அவர்கள் தனது துரித நடவடிக்கையினால் மாவட்டத்தின் பிறபகுதிகளை செழுமையாக மாற்றியமைத்துள்ளார். ஆனால் இந்த ரோடு விஷயத்தில் ஒட்டுமொத்தமாக பொதுமக்களிடையே மாவட்ட நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி மாவட்டநிர்வாகமும்,நெடுஞ்சாலைத்துறையும் இச்சாலையை சீர்செய்ய முன்வர வேண்டும் என்ற கோரிக்கை இப்பகுதி பொதுமக்களிடையேயும்,சமூகஆர்வலர்களிடையேயும் வலுப்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *