ஓஎம்ஆர் சாலை படூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கிராமசபை கூட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது.
இரண்டு மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் படூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊராட்சி பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பகுதியில் சிறியதாக உள்ள குறைகளை கரூர் ஊராட்சி செயலர் வாசுதேவன் அவர்களிடம் கூறினார்கள் உடனடியாக இரண்டு நாட்களில் அனைத்து தீர்மானங்களையும் நிறைவேற்றுவதாக ஊராட்சி செயலர் கூறியுள்ளார்.
இதில் முக்கியமாக வரும்காலம் மழைக்காலமாக இருப்பதால் பொதுமக்கள் அவசியமாக மழை நீரை சேமிக்க வேண்டும் என்ற ஒரு நிபந்தனையை முழுமையாக கொண்டுவர வேண்டும் என ஊராட்சி செயலர் குறிப்பிட்டுள்ளார் மேலும் குப்பைகள் அவர்களின் வீட்டு வாசலில் வைத்து விட்டாள் துப்புரவு பணியாளர்கள் உடனடியாக அகற்றுவதாகும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எந்த ஒரு பிரச்சினைகள் இருந்தாலும் உடனடியாக ஊராட்சி செயலர் அலுவலகத்திற்கு வந்து அணுகி அவர்களின் பிரச்சினைகளையும் முழுமையாக தீர்ப்பதற்கு வழி வகுக்கப்படும் என பல கோரிக்கை பொதுமக்களுக்கு வைத்துள்ளார்.
தலைமை செய்தியாளர்:அ.நூருல் அமீன்.