உலக செய்திகள்

சர்ச்சையை கிளப்பும் சக்கரக்கோட்டை ஊராட்சி. கட்சி அலுவலகமாக காட்சி அளிக்கின்ற அவலம்!

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரகோட்டை ஊராட்சி அரசு அலுவலகமா? இல்லை அரசியல்வாதிகளின் அலுவலகமா? என்று புரியாமல் திரும்பிச் செல்லும் மக்களை பார்க்கையில் மன வேதனை அளிக்கிறது.

கடந்த முறை சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவராக இருந்த S.M.நூர்முகம்மது ஊராட்சி மன்ற அலுவலகத்தை கட்சி அலுவலகமாகவே பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் குறித்து சக்கரகோட்டை ஊராட்சி பகுதி மக்கள் கூறுகையில்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கட்சி அலுவலகமாக மாற்றி வைத்து தனி ராஜ்ஜியம் நடத்தி வருகிறார். இதை ஊராட்சி செயலர் கண்டுகொள்ளாமல், எந்த கவலையும்படாமல் தான்தோன்றி தனமாக செயல்படுவது மன வேதனை அளிக்கிறது.
மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வந்து நேரில் ஆய்வு செய்து, சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தை மீட்டு தரவேண்டும். இதனைக் கண்டும் காணாததுபோல் இருந்த ஊராட்சி செயலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர்:S.M.M.நசீர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *