தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற TNPSC தேர்வாணயம் நடத்தும் தேர்வில் கீழக்கரை இராமநாதபுரம் ஆகிய 2சென்டர்களில் முறைகேடு நடைபெற்றதாக விசாரணை நடைபெற்று வந்தது.
அத்தேர்வு சமயத்தில் கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா கீழக்கரை சமூக பொருப்பு தாசில்தார் ஆக இருந்தார். அதன் அடிப்படையில் அவர் கீழக்கரை மையத்தின் தேர்வாணய முக்கிய அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த முறைகேடு விசாரனையல் குரூப்4 தேர்வில் 2 மையங்களிலும் முறைகேடு நடக்க உடந்தயாக இருக்க ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, 99நபர்களுக்கு வாழ்நாள் முழுதும் TNPSC தேர்வு எழுத தடை விதித்துள்ளதாக தகவல்கள் வைளியாகிநுள்ளது. இந்த முறைகேடுகள் தேர்வு முடிந்தவுடன் இடைத்தரகர்கள் மூலம் சரியான விடையை நிரப்பி முறைகேடு செய்ய 5முதல் 10லட்சம் வரை பணம் பெற்றுள்ளனர் என கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கீழக்கரை வட்டாட்சியர் வீர ராஜா மற்றும் இராமேஸ்வரம் வட்டாட்சியர் பார்த்தசாரதி இருவரையும் விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் சென்றுள்ளனர், இதனால் இவ்விருவரும் கைது செய்யப்படலாம்.
