தமிழ்நாடு

“அரியலூர் மாவட்டத்தில் அகிலமே போற்றுகின்ற அரசுப்பள்ளி”.!

அரியலூர் மாவட்டம், இடையத்தான்குடி,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அரியலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக ஸ்கைப் மூலம் ஆங்கில மொழியில் சரளமாக உரையாடி வருகின்றனர் ,அப்பள்ளி மாணவச் செல்வங்கள்… அப்பள்ளிகளில் உடலின் வலிமை, ஆற்றல், விரைவு திறன், நினைவுத்திறன், ஏற்படுத்தக்கூடிய சிலம்பாட்டம் பயிற்சி, யோகா-தியானம்,
சதுரங்கம் ,
காகிதமடிப்பு கலை,கராத்தே,
தன்னம்பிக்கை பயிற்சி,
கையெழுத்து பயிற்சி போன்ற வகுப்புகளும், மாணவர்களுக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது…மனித வள மேம்பாட்டு துறையின் மூலம் பாஷா சங்கம் என்ற திட்டத்தின் மூலம் இந்தியாவின் 22 அலுவல் மொழிகளை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பள்ளி மாணவர்கள் அறிவியல் படைப்பிற்கான உலக சாதனை நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இப்பள்ளி மாணவி சினேகா, under 13 சதுரங்க போட்டியில் மாவட்ட, மண்டல அளவிலும் ,தமிழக அளவிலும் வெற்றிகளை குவித்து வருகிறார்…
இப்பள்ளியில் 50 மாணவர்களுக்கு மேல் சதுரங்க போட்டியில் பங்கு பெற பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இப்பள்ளி மாணவச் செல்வங்கள் தமிழர்களின் பாரம்பரிய வீரியமுள்ள விதைகளை, வேளாண்மைக்கு தருகின்ற வகையில் முளைப்பாரியை திருவிழா நேரங்களில் கிராம மக்களுக்கு பரிசாக வழங்குகின்றனர்… மாணவர்கள் பொருளாதார மதிப்பீடு உணர ,நாணய கண்காட்சியும் இயற்கையை காக்க, நிலத்தடி நீரை அதிகப்படுத்த, பனை விதைகளையும் மரக்கன்றுகளையும் ஊரில் உள்ள ஏரி குளங்களில் நட்டு பராமரித்து வருகின்றனர்… விதைப்பந்து ,விதை பென்சில்கள், மாணவர்கள் தயாரித்து பயன்படுத்தி வருகின்றனர்…அறிவியல் கண்காட்சியிலும் ஒவ்வொரு வருடமும் சிறந்த அறிவியல் படைப்பிற்காக இப்பள்ளி மாணவர்கள் மாவட்ட ,மண்டல, அளவில் பரிசுகளை வென்று வருகின்றனர். இப்பள்ளியில
ஆசிரியர் எமல்டா குயின் மேரி அவர்களை தொடர்பு கொண்டு பேசிய பொழுது, எம் அரசுப் பள்ளி மாணவச் செல்வங்களை அனைத்து துறைகளிலும், எதிர்காலத்தில் சிறந்து விளங்குவதற்கு, அவர்களை தற்போது இருந்தே நல் எண்ணங்களையும், சமூக சிந்தனைகளையும், கல்வி செயல்பாடுகளையும், தற்சார்பு பொருளாதாரத்தையும், மாணவர்களின் மனதில் விதைத்து வருகின்றோம் என்றார்கள்… இதைப் போலவே ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவச் செல்வங்களை, எதிர்கால நல்வாழ்விற்கு வித்திட்டால்,வருங்கால மாணவச் சமுதாயம் வல்லரசு இந்தியாவை உருவாக்கும் என்பதில் எந்தவிதசந்தேகமும் இல்லை….இப்பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். வாழ்க வையகம், வாழ்க வளமுடன்… அரியலூர் மாவட்ட செய்தியாளர் த.இளவரசன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *