இராமநாதபுரம்,மே.01:-

இராமநாதபுரத்தில் நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரமலான் மாதத்தில் கொரோனா காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ரம்ஜான் பண்டிகைக்கு ஆடைகள் வாங்க தயார்நிலையில் உள்ள இஸ்லாமியர்களை குறிவைத்து கார்ப்பரேட் நிறுவனங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுத்து தடையை நீக்கி கடையை திறக்க முயற்சி செய்கின்றனர். இவ்வாறு திறந்தபின் கடைக்கு இஸ்லாமியர்கள் ஆடை வாங்க சென்றால் கூட்டம் காரணமாக கொரோனா பரவினால் சிசிடிவி கேமரா மூலம் யார் பரவ விட்டுஇருப்பார்கள் என பார்த்து சோதனை என்ற பெயரில் இஸ்லாமியர்களுக்கு இடையூறு ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. கொத்து கொத்தாக இறப்பு ஏற்பட்டால் இஸ்லாமியர்கள் மீது பழியை போட தயாராகிவிடுவர். ஏற்கனவே டில்லியில் நடந்த தப்லிக் மாநாட்டிற்கு சென்றவர்கள்தான் கொரோனா பரப்பினர் என தவறான தகவல்களை பரப்பினர். எனவே, இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகைக்கு ஏற்கனவே புதிய ஆடை வைத்திருந்தால் அதே ஆடையை பயன்படுத்துங்கள் இல்லையெனில் பழைய ஆடையை பண்டிகைக்கு பயன்படுத்துங்கள். இந்த செய்தி ஜமாத் நிர்வாகம் ஒலிபெருக்கியில் தெரிவிக்க வேண்டும். ஐக்கிய ஜமாத் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும். ஏனென்றால் நாளை மிகப்பெரிய யஅசம்பாவிதம் நடக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, இஸ்லாமியர் சமுதாயம் தற்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என, டாக்டர் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பிற்கு முன்னர் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஊரடங்கு வேளையிலும் களப்பணியாற்றும் ராமநாதபுரம் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு கொரோனா நிதியுதவியாக ஒருவருக்கு தலா ரூ.1000வீதம் 10-க்கும் மேற்ப்பட்ட நபர்களுக்கு தனது சொந்த பணத்தில் வழங்கினார்.
நிதியுதவி பெற்ற பத்திரிகையாளர்கள் விபரம்:-
1.அ.நூருல்அமீன்(அதிரடிகுரல் தலைமைநிருபர்),
2.அன்வர்அலி(மணிச்சுடர்),
3.சாமிநாதன்(புதுகைவரலாறு),
4.ஜெகசிற்பியன்(ஷாலினி டி.வி),
5.குருசாமி(மக்கள் டி.வி).
இவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட பத்திரிகை நிருபர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கினார்.நிதியுதவி பெற்ற நிருபர்கள் அனைவரும் நேஷனல் ப்ரஸ்&மீடியா பெடரேஷன் அமைப்பிற்க்கும்,அதன் தேசியத் தலைவரும்,புலனாய்வு எக்ஸ்பிரஸ் மாத இதழின் ஆசிரியருமான தேசியவிருதாளர்,டாக்டர்,V.அப்துல்ரசாக் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடை பெற்றனர்.
✍தலைமைநிருபர்:அ.நூருல்அமீன்.
