தமிழ்நாடு

நேஷனல் ப்ரஸ்&மீடியா பெடரேஷன் தேசியத்தலைவர் கோரிக்கை.

✍தலைமைநிருபர்:அ.நூருல்அமீன்.

தமிழக முதலமைச்சர் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இராமநாதபுரம்,மே.02:-

தமிழக முதலமைச்சர் தற்போது சிக்கலில் தவிக்கும் மக்களுக்கு ரூ.10 ஆயிரம் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவர் டாக்டர் அப்துல் ரசாக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு அன்பான கோரிக்கை வைக்கப்படுகிறது. கொரோனாவால் அரசு வழங்கிய ரூ.1000 மக்களுக்கு குடும்பம் நடத்த போதுமானாதாக இல்லை. குடும்ப அட்டதாரர்களுக்கு ரூ.10 ஆயிரம் அரசு வழங்க வேண்டும். பத்தாயிரம் என்பது மக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தாருங்கள். அதுவும் கடனாக கொடுங்கள். இந்த பணத்தை ஒவ்வொரு மாதமும் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும்போது ரூ.500 வீதம் திரும்ப தருகிறோம். 20 மாத தவணையில் வட்டி இல்லாமல் தாருங்கள் என கேட்கிறோம். அரசாங்கத்திடம் கேட்பது மக்களின் உரிமை. அரசியல்வாதிகள் உயர்ந்துள்ளனர். ஆனால் மக்கள் அப்படியேதான் முன்னேற்றம் இன்றி உள்ளனர், எனவே, மக்களுக்கு ரூ.10 ஆயிரம் கண்டிப்பாக வழங்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நாட்டு மக்களின் மேல் உள்ள பற்றால் இந்த கோரிக்கையை வைக்கிறேன்.
இவ்வாறு டாக்டர் அப்துல்ரசாக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *