✍தலைமைநிருபர்:அ.நூருல்அமீன்.

இராமநாதபுரம்,மே.01:-

மாண்புமிகு தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்டம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் பற்றிய செய்திகளை மக்களிடத்தில் உடனுக்குடன் கொண்டு சேர்க்கும் சேவைப்பணியில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் பத்திரிகையாளர்களின் பணிகளை பாராட்டும் விதமாக செய்தியாளர்களுக்கு நிவாரண உதவியாக அரிசி,காய்கறிகள், மளிகைப்பொருட்கள் கூடுதலாக நிதி உதவியையும் 40-க்கும் மேற்பட்ட மாவட்ட செய்தியாளர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் திரு MA.முனியசாமி அவர்கள் வழங்கினார். இதில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திரு.சாமிநாதன் அவர்கள், இராமநாதபுரம் ஒன்றிய கழக செயலாளர் திரு எம் அசோக்குமார் அவர்கள் ராமநாதபுரம் நகர் கழக செயலாளர் திரு எம் அங்குசாமி அவர்கள் மாவட்ட மாணவரணி செயலாளர் திரு K.செந்தில்குமார் அவர்கள் மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் திரு RG.மருதுபாண்டியன் அவர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் திரு A.சரவணகுமார் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

