✍தலைமைநிருபர்:அ.நூருல்அமீன்.

இராமநாதபுரம்,மே.01:-


இராமநாதபுரம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பாக மாவட்டம் முழுவதும் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் செந்தில் செல்வானந்தம் தலைமையில் தடை உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கி உதவி வருகின்றனர்.
அந்தவகையில் தற்போது ராமநாதபுரம் நகராட்சி மாரியம்மன் கோயில் சத்யாநகர் பகுதியில் உள்ள மக்கள் வருமானமின்றி அன்றாட பிழைப்பிற்கு மிகவும் சிரமப்படுவதாக தகவல் வந்தததை தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றம் சார்பாக உதவி செய்ய முன்வந்தனர்.
மாவட்ட செயலாளர் இன்ஜினியர் செந்தில் செல்வானந்தம் தலைமையில் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முருகானந்தம் முன்னிலையில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிகண்டன், நகர் செயலாளர் ராஜேஸ்வரன், தட்சிணாமூர்த்தி, வெங்கடசுப்பு, தம்பிதுரை, ஜமீல், மணிகண்டன், கார்த்திக், காளிதாஸ், பூபால்தாஸ், சுரேஷ்.துரைமுருகன், அப்பாஸ், முருகன் ஆகியோர் சத்யா நகர் பகுதிக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களுக்கு அரிசி, காயகறிகள், மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பை வழங்கினர். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள பத்திரிகையாளர்களுக்கும் நிவாரண உதவி வழங்கினர். நிவாரண உதவி வழங்கிய ரஜினி மக்கள் மன்றத்திற்க மக்கள் மனதார நன்றியை தெரிவித்துள்ளனர்.
