தமிழ்நாடு முக்கிய செய்திகள்

லடாக் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உடல் முப்படை அணிவகுப்பு மரியாதையுடன் நல்லடக்கம்.

இராமநாதபுரம்,ஜீன்.18:-

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை,தாலுகாவில் உள்ள கடுக்காலூர் கிராமத்தில் ராணுவ வீரர் பழனியின் தாய் தந்தையர்

இல்லத்தில் அரசு மரியாதைகளுடன் இன்று அதிகாலை 3 மணி அளவில் உடல் வந்து சேர்ந்தது.இதனையடுத்து பொதுமக்கள் பார்வைக்கு

உடல் வைக்கப்பட்டது.கிராம மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர்.அதன்பின் இன்று அதிகாலை 7 மணி அளவில் அவருக்கான இறுதிச்சடங்குகள் ஆரம்பமானது.முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை செய்து அவரது உடலை அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்ய கொண்டு வந்தனர். அதன்பின் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ்,அவரை அடுத்து உதவி ஆட்சியர் சுகபுத்ரா,அதன்பின் ராணுவ மலர்வளைங்களை வைத்து மரியாதை

 செலுத்தினர்.உடலை அடக்கம் செய்யும் போது இராணுவத்தினர் 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகர்(பரமக்குடி),கருணாஸ்(திருவாடானை),ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கா.நவாஸ்கனி போன்ற முக்கியஸ்தர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சிக்கு திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா(எ)முத்துராமலிங்கம், மற்றும் கட்சி நிர்வாகிகள்,தே.மு.தி.க மாவட்ட செயலாளர் சிங்கை ஜின்னா பா.ஜ.க மாநில தலைவர் முருகன்,மாநில துணைத்தலைவர் 

குப்புராமு,மாவட்ட தலைவர்,முரளிதரன் மாவட்ட செயலாளர்,கார்த்திக் உட்பட அனைத்து முக்கிய பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.முன்னதாக உடல் வந்தடைந்தவுடன் நள்ளிரவு 3-மணியளவில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு,கொ.வீர ராகவராவ் ராணுவ வீரரின் சொந்த ஊரான கடுக்காலூர் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து தமிழக அரசு அறிவித்த நிவாரணத்தொகை ரூ,20-லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.உடன் அ.இ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி,பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்பிரபாகர் உள்ளிட்டோர் இருந்தனர்.

ராமநாதபுரம்:✒அ.நூருல்அமீன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *